இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைமேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி மேலும் மூன்று நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்சமயம் இடம்பெற்றுவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அவர் கூறினார்.
அத்துடன் இலங்கையில் தற்போது 20 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இறுதியாக உறுதிசெய்யப்பட்டவர்களிடையே 13 வயது சிறுமியும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply