சீனா உட்பட 96 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகளவில் வஹானிலிருந்தே பரவியுள்ளதால் சீனாவில் பல்வேறு போக்குவரத்து தடைகள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் விமான சேவைகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இலங்கை – சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 30 வரையில் சவூதி ஜெத்தாவுக்கான விமான சேவைகளை நிறுத்துவதற்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply