உலக மக்களையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பரவல் வேகமாகிக் கொண்டிருக்கிறது. வைரஸ் சில உணவுகளினால் தாக்குவதாகவும் தகவல் வைரலாகி வருகின்றது.
அதனால், மக்கள் பலரும் எந்த உணவை சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருக்கும் இறைச்சி மார்கெட்டில் இருந்து பரவ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள இறைச்சி மார்கெட்டில் கோழி, ஆட்டிறைச்சி, கடல் உணவுகள், செம்மறி ஆடுகள், பன்றி இறைச்சிகள் மற்றும் பாம்புகள் போன்ற அனைத்து வகையான இறைச்சிகளும் விற்கப்படுகின்றன.
இந்த காரணத்தினால், இந்தியாவில் உள்ள மக்கள் கடல் உணவை சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.
இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, கொரோனா வைரஸிற்கும், கடல் உணவுகளுக்கும் தொடர்வு ஏதும் இல்லாததால், இந்தியாவில் கடல் உணவை உண்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வௌவால் இறைச்சி கொரோனாவை உண்டாக்குமா?
சமீபத்தில் சீனாவை சேர்ந்த ஒருவர் வௌவால் சூப் குடிப்பது போன்ற வீடியோவை எடுத்து தனது இணையத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோவானது கொரோனா வைரஸ் இறைச்சி மூலம் பரவுகிறது என்ற பல கூற்றுகளுக்கு வழிவகுத்ததுடன், ஆய்வாளர்களும் இது உண்மை என்று நம்புகின்றனர்.
கொரோனா வைரஸ் ஒரு உயிரியல் நோய் மற்றும் இது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவுகிறது.
வௌவால் இறைச்சியால் கொரோனா வைரஸ் பரவுவதாக பல கூற்றுகள் கூறினாலும், எதுவும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை.
இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கொரோனா வைரஸ், வௌவால் மற்றும் பாம்பிற்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா என்று சோதித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இறைச்சிகள் கொரோனா வைரஸை உண்டாக்குமா?
கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவுவதால், இறைச்சி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற தவறான கருத்து மக்களிடையே உலாவி வருகிறது.
ஆனால் எப்போதும் உண்மை தெரியாமல் எதையும் பரப்பக்கூடாது. இதுவரை இறைச்சி உணவுகள் கொரோனா வைரஸை உண்டாக்கும் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை.
எனவே இந்தியாவில் அசைவ உணவுகளை சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது தான். ஆனால் அப்படி சாப்பிடும் இறைச்சியை சுத்தமாக கழுவி, நன்கு வேக வைத்து பின்னரே உட்கொள்ள வேண்டும். இப்படி சமைத்து உட்கொண்டால், எந்த ஒரு நோயும் இறைச்சியின் மூலம் பரவாது.
எனவே கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுக்குறித்த பல புரளிகளும் பரவும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு, உண்மை தெரியாமல் கண்மூடித்தனமாக எதையும் நம்பாமல், தெளிவுடனும் அச்சமின்றியும் இருங்கள்.
Leave a Reply