உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக இளம் சிறுவர்கள் நிறையவே மிக எளிதாக நோய்த் தொற்றுக்களுக்கு ஆளாகி விடுகிறார்கள்.
* உடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
* இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும்.
* நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.
* வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும்.
* அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். கைகளை சோப்பு கொண்டு 20 வினாடிகள் வரை நன்றாகக் கழுவ வேண்டும்.
* கைகளின் முன்பக்கம், பின்பக்கம், நகக்கண்கள் விரல்களுக்கு இடையேயும் சுத்தம் செய்ய வேண்டும்.
* கைகளை நன்றாகக் கழுவாமல் கண்கள், மூக்கு வாய் அருகே கொண்டு செல்லக்கூடாது.
* சளி போன்ற சுவாசக்கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 2 மீ. விலகியிருக்க வேண்டும்.
* அசைவ உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
* கொரோனா வைரஸ் தாக்கியதன் அறிகுறிகள்: வறட்டு இருமல், மூச்சுத்திணறல், உடல் வலி, நிமோனியா, கிட்னி செயலிழப்பு போன்றவை ஏற்படும்.
ஒருவேளை தொற்று பரவினால்:
நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். நோய் பாதித்தவரை தனிமை படுத்துவது அவசியம்.
மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.
சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *