கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 21 கொரோனா நோயாளர்களுள் ஒருவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.எச் மருத்துவமனையின் பிரதான மருத்துவ நிபுணரான மருத்துவர் ஏரங்க நாரங்கொட ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த நபர் ஏற்கனவே கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த நபருக்கு ஸ்பா எனப்படும் உடல் மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனை உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள 16 அரச மருத்துவமனைகளில் 800க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply