கடந்த 19ம் திகதி, இந்தியன் 2 படப்பிடிப்பு இடம்பெற்றவேளை, அங்கே நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த விடையம். பின்னர் கமல் ஹாசன் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் மீது பழியை போட்ட விடையம் பற்றி எல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் தற்போது இந்த திகில் காட்சி மாறிவிட்டது. அது என்னவென்றால் அன்றைய தினம் பாரம் தூக்கி(கிரைன்) முறிந்து விழுந்ததில் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பது பலர் அறிந்த விடையம். நீங்கள் அறியாத விடையம் என்னவென்றால்… யார் இந்த கிரைனை நகர்த்தச் சொல்லி ஆடர் கொடுத்தது என்பது தான். ஆம் அது தான் தற்போது சூடு பிடித்துள்ள விடையம்.

இது தொடர்பாக விசாரணை நடத்த, நடிகர் கமல் ஹாசனையும் இயக்குனர் ஷங்கரையும் நேரில் வந்து ஆஜராகுமாறு சென்னை பொலிஸ் சம்மன் அனுப்பி உள்ளார்கள். காரணம் என்னவென்றால், படப்பிடிப்பு நடந்த வேளை, பெட்டி வடிவில் அமைந்த பாரிய லைட் செட்டப் ஒன்றை இந்த கிரைன் தூக்கி வைத்திருந்துள்ளது. பொதுவாக அதனை வேறு திசைக்கு நகர்த்த வேண்டும் என்றால் முதலில், அதன் உயரத்தை குறைத்து நிலத்தில் இருந்து ஒரு 10 அடி உயரத்தில் வைத்துக் கொண்டு நகர்த்த வேண்டும். ஆனால் அது நின்ற சுமார் 60 அடி உயரத்தில் வைத்துக் கொண்டே அதனை வேறு திசைக்கு நகர்த்தி உள்ளார் கிரைன் ஆப்பரேட்டர்.

இப்படி இந்த திசைக்கு கிரைனை நகர்த்தச் சொல்லி, உத்தரவை பிறப்பித்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரே இந்த 3 கொலைகளுக்கும் காரணமானவர் என்கிறார்கள் பொலிசார். அவர்கள் சொல்வதில் பிழை இல்லை. எனவே லைக்கா நிறுவனம் பாதுகாப்பற்ற உபகரணங்களை பாவித்தார்கள் என்ற கருத்து அப்பட்டமான ஒரு பொய் என்பது தெரியவந்துள்ளது. அத்தோடு பாரம் தூக்கியை(கிரைனை) நகர்த்தச் சொன்ன நபரால் தான் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று சென்னை பொலிசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்கள்.

எனவே கிரைன் தூக்கி வைத்திருந்த லைட் செட்டப் எவ்வளவு பாரமானது. அதனை மெதுவாக கீழே இறக்கி, பின்னரே அதனை வேறு திசைக்கு நகர்த்த வேண்டும் என்று தெரியாத ஒரு இயக்குனர் அல்லது யாரோ ஒருவர் கொடுத்த கட்டளையின் அடிப்படையில் தான். கிரைன் ஆப்பரேட்டர் அதனை வேறு திசைக்கு நகர்த்த முற்பட்டவேளை. அது  விழுந்துள்ளது என்பது திட்டவட்டமாக அறியப்பட்டுள்ளது

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *