வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்ல வரையான நீர்வழிப்பாதையின் ஊடான படகு சேவை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்வு வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடத்தில் காமினி லொக்குகே தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இத்திட்டத்தை முன்னெடுக்கின்றது.

இப்படகு சேவை ஆரம்பிப்பது தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் திட்டமிட்டிருந்தார்.

கொழும்பு நகரத்தில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படுகிறது.

இந்த படகு சேவையின் ஊடாக வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லைக்கு 30 நிமிடத்தில் செல்லக்கூடியதாக இருக்குமெனவும், காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் இந்த சேவை இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஆரம்பத்தில் நான்கு படகுகள் மட்டுமே சேவையில் ஈடுபட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *