பிரேசில் நாட்டைச் சேர்ந்த டிஜீசஸ் பார்போசா என்ற பெண் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை அழவே இல்லை. இதனால் மருத்துவர்கள் எப்போதும் அதை அழ வைப்பதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆனாலும் அழாத குழந்தை அதற்குப் பதிலாக மருத்துவர்களை முறைக்கும் விதமாக பார்த்துள்ளது. இதைக் குழந்தை பிறந்தவுடன் புகைப்படம் எடுப்பதற்காக அந்த பெண்ணால் நியமிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர் அதை உடனடியாக புகைப்படம் எடுத்துள்ளார். இதை அந்த குழந்தையின் தாயார் சமூகவலைதளங்களில் பகிர இப்போது உலகம் முழுவதும் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

குழந்தை தொப்புள் கொடியை வெட்டியபோதுதான் வீல் என்று அழுததாம். அதனால் குழந்தை இப்போது நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *