வெடித்து சிதறிய திருவாதிரை நட்சத்திரம்? – நம்மால் பார்க்க முடியுமா?

இந்திய சோதிட குறிப்புகளில் முக்கிய நட்சத்திரமாக காணப்படும் திருவாதிரை நட்சத்திரம் வெடித்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள்தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. திருவாதிரை என்றழைக்கப்படும் இந்த நட்சத்திரத்திற்கு விஞ்ஞானிகள் அளித்துள்ள பெயர் பெட்டல்க்யூஸ் (Betelgeuse). ஓரியன் நட்சத்திரக் குடும்பத்தில் உள்ள இந்த நட்சத்திரத்தை பிக் ரெட் ஜியண்ட் என்றும் அழைப்பார்கள். விண்வெளியில் காணப்படும் மிக ஒளிரக்கூடிய நட்சத்திரங்களில் ஒன்றான திருவாதிரை சூரியனை விட பல மடங்கு பெரியதாகும். சமீப நாட்களில் திருவாதிரையின் ஒளி மங்கி வருவதை …

மருத்துவர்களை முறைக்கும் குழந்தை – உலக அளவில் ட்ரண்ட் ஆகும் புகைப்படம் !

பிரேசில் நாட்டைச் சேர்ந்த டிஜீசஸ் பார்போசா என்ற பெண் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை அழவே இல்லை. இதனால் மருத்துவர்கள் எப்போதும் அதை அழ வைப்பதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் அழாத குழந்தை அதற்குப் பதிலாக மருத்துவர்களை முறைக்கும் விதமாக பார்த்துள்ளது. இதைக் குழந்தை பிறந்தவுடன் புகைப்படம் எடுப்பதற்காக அந்த பெண்ணால் நியமிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர் அதை உடனடியாக புகைப்படம் எடுத்துள்ளார். இதை அந்த …

46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அபூர்வ பறவை ஒன்றில் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டிபிடித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சைபீரியாவின் வடகிழக்கு பனிமண்டல பகுதியில் வேட்டைக்கு சென்ற வேட்டையர்கள் சிலர் பனியில் புதைந்து உறைந்து கிடந்த பறவை ஒன்றின் சடலத்தை கண்டெடுத்திருக்கிறார்கள். அது மிகவும் பழைய உடலாக தெரிந்ததால் அதை ஸ்வீடன் நாட்டு அருங்காட்சியக ஆய்வாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பறவை எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என்பதை கண்டறிவதற்காக நடத்தப்பட்ட கார்பன் டேட் சோதனையில் ஆச்சர்யகரமான உண்மைகள் தெரிய வந்துள்ளன. அந்த பறவை பனியுகம் என்றழைக்கப்படும் 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. இந்த …

கூகிள் ப்ளே ஸ்டோரில் மோசடி செய்து வந்த 600 மொபைல் அப்ளிகேசன்களை நீக்கியுள்ளது கூகிள்.

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் அனைவராலும் பிரபலமாக உபயோகிக்கப்படும் மொபைல்கள் ஆண்ட்ராய்ட் மென்பொருளில் இயங்குபவையாக உள்ளன. அண்ட்ராய்டில் நமக்கு தேவையான அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்து கொள்ள கூகிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டதுதான் கூகிள் ப்ளே ஸ்டோர். பலவிதமான அப்ளிகேசன்களை கொண்ட ப்ளே ஸ்டோரில் டெவலப்பர்கள் சிலர் போலியான அப்ளிகேசன்களை பதிவேற்றி அதன்மூலம் வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்யும் வேலையையும் செய்து வருகின்றன. இதுகுறித்த புகார்களை பரிசீலனை செய்த கூகிள் மோசடி செய்யும் 600 டெவலப்பர்களையும், அப்ளிகேசன்களையும் ப்ளே ஸ்டோரில் இருந்து …

சாம்சங் கேலக்ஸி S20+!! அப்படி என்ன ஸ்பெஷ்லா இருக்கு?

சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்‌ஷிப் கேலக்ஸி எஸ்20 பிளஸ் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் காஸ்மிக் கிரே, கிளவுட் புளூ, காஸ்மிக் பிளாக் நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனைக்கான முன்பதிவு சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் சிறப்பம்சங்கள்: # கேலக்ஸி எஸ்20 பிளஸ் – 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3200×1440 பிக்சல் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே # …

மனித எலும்புகளால் கட்டப்பட்ட மர்ம சுவர்… ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

பெல்ஜியத்தில் மனித எலும்புகளால் கட்டப்பட்ட 500 ஆண்டு பழைமையான கோட்டை போன்ற சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளார்கள். பெல்ஜியத்தில் உள்ள செயிண்ட் பாவே தேவாலயத்தின் பின்புறம் இந்த சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கல்லறைகள் இருக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக ஒரு தரப்பினர் கூறினாலும், கோட்டை வடிவத்தில் எலும்புகள் இருப்பதால் அதனை ஆராய்ச்சியாளர்கள் மறுத்துள்ளார்கள். இந்த சுவர் திட்டமிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக எலும்புகளால் கட்டப்பட்டுள்ளது என்றும், அருகில் இருந்த கல்லறைகளில் இருந்து இதற்கான எலும்புகள் கொண்டுவரப்பட்டு …

`கிருஷ்ஷ்ணா…!?’ கதறிய கமல்! இந்தியன்-2 விபத்தும், ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி திக்திக் பின்னணியும்

மருத்துவமனைக்குச் சென்ற கமல் `கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு… கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு?’ எனத் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். `இந்தியன்-2’ படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் படக்குழுவை நிலைகுலையச் செய்துள்ளது. “எத்தனையோ விபத்துகளைக் கடந்திருந்தாலும் இந்த விபத்து கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்” எனத் தன்னுடைய வேதனையை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் கமல். 2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே `இந்தியன்-2’ படத்தை வெளியிட வேண்டும் என்பதால் …

மூளையில் நினைப்பதை மொழியாக்கம் செய்யும் புதிய கண்டுபிடிப்பு… சென்னை ஐ.ஐ.டி அசத்தல்!

அனைவருமே பயன்படுத்தும் வகையில், நேரடியாக சிக்னல்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிற மொழிக்கு (ஆங்கிலம்) அந்தத் தகவல்களை மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்..? மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை நாம் புரிந்துகொள்ள முடிந்த மொழியாக மாற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி-யைச் (IIT) சேர்ந்த துணைப் பேராசிரியர் விஷால் நந்திகானா மற்றும் அவருடைய மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். சிக்னல்கள் என்றாலே அலை வடிவில் (Waveforms) தான் இருக்கும். அந்த அலை வடிவில் உள்ள சிக்னல்களை நாம் புரிந்துகொள்ளும் வகையில் …

சர்வதேச சந்தையில் ஐபோன் விலையை குறைக்கும் ஆப்பிள் நிறுவனம்

சர்வதேச சந்தையில் ஆப்பிள் ஐபோன் வகைகளின் விற்பனை குறைந்திருப்பதை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் சில ஐபோன் வகைகளின்  விலையை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. அந்த வகையில் ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட வகைகளின் விலையை குறைக்க ஆப்பிள் நிறுவனம் சீன ஐபோன் விற்பனையாளர்களுக்கு தகவல் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்ட …

முகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி!

பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான செய்திகள் சென்றடைபவர்களின் எண்ணிக்கையினை 5 ஆக பேஸ்புக் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில வட்ஸ் அப் சமூக வலைதளம் செய்தி பரிமாற்றலை மட்டுப்படுத்தியுள்ளது. ஏனைய நாடுகளில் 20 பாவனையாளர்களுடன் …