சீனாவில் கொடூரம்: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை புதைத்த மகன் – 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரைச் சேர்ந்தவர் 79 வயது மூதாட்டி வாங். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவரை அவரது மகன் மா (வயது 58) கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மா, தனது தாயை சக்கர நாற்காலியில் அமரவைத்து வீட்டில் இருந்து அழைத்து சென்றார். அதன் பிறகு மா, மட்டும் தனியாக வீட்டுக்கு திரும்பினார். இது பற்றி மாவின் மனைவி ஜாங் அவரிடம் கேட்டபோது அவர் பதிலளிக்கவில்லை. இந்த …

போட்டி போட்டு கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிக்கும் நிறுவனங்கள்; 2 மருந்துகள் தயார்

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டறியும் பணி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயான்டெக் ஆகியவை இணைந்து ஆர்என்ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளன. இதை நியூயார்க் பல்கலைக்கழகம், மேரிலாந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மனிதர்களுக்கு செலுத்திச் சோதித்துப் பார்க்க உள்ளனர். திங்களன்று சோதனை …

அமெரிக்காவில் அதிவேகத்தில் காரை ஓட்டிய 5 வயது சிறுவனால் பரபரப்பு

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு கார் மட்டும் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த போலீசார் தங்களது வாகனத்தில் விரட்டி சென்று அந்த காரை மறித்தனர். பின்னர் காரின் கதவை திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரை 5 வயது சிறுவன் தனியாக இயக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனிடம் இது யாருடைய கார்? காரை …

சீனாவில் மீண்டும் கொரோனா நேற்று ஒரே நாளில் 1300 பேர் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 22 லட்சத்து 23 ஆயிரத்து 240 பேருக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 328 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து …

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம்- அறிவியல் உலகம் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம் போட்டிருக்கிறது. இது அறிவியல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய கேள்விகள் பில்லியன் டாலர் கேள்விகளாக நிலைத்து நிற்கின்றன. சீனாவின் உகான் நகரில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில்தான் இந்த வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தோன்றியது என்பதுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிற தகவலாக இருந்து …

யாழில் ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்? சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழில் தொடர்ந்து அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் ஆலோசனையை வழங்கவுள்ளதாக கூறியிருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்.மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கண்காணிக்கப்படுபவர்களுக்கு பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டு ஆபத்தில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பே ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிபார்சை வழங்க முடியும் எனவும் கூறியுள்ளார். …

ஸ்ரீலங்கா மக்களுக்கு விண்கல் மழை பொழிவை பார்ப்பதற்கான அரிய வகை சந்தர்ப்பம்

விண்கல் மழை பொழிவை பார்ப்பதற்கான அரிய வகை சந்தர்ப்பம் ஒன்று ஸ்ரீலங்கா மக்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நட்சத்திரங்கள் தொடர்பான வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், இன்று முதல் அதிகாலை நேரங்களில் இதனை அவதானிக்க முடியும். பொது மக்களுக்கு கிடைத்து இருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். எதிர்வரும் 25ஆம் திகதி வரை விண்கல் மழை பொழிவை அதிகாலை நேரங்களில் பார்க்க …

கொரோனா வைரஸ் என்ற கொள்ளை தாக்குதல் தான் முன்றாம் உலக யுத்தமா?

இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஷகொள்ளை என்ற மாற்ற மருந்தில்லாத நோய்க்குள்ளாகி இறந்தவர்களை அவர்களின் உடலில் கைபடாது படுத்த பாயுடன் சுருட்டித் தூக்கி கிடங்கில் போட்டு எரித்துவிடுவது சட்டத்துக்குட்படாத வழக்கமாகவிருந்தது. இன்று கொரோனா மரணங்களும் அது போன்ற இறுதிச் சடங்குகளையே சந்திக்கின்றன. மரணித்தவர் இரத்த உறவாயினும், தொற்று நோயாக இருப்பின் வேறு என்ன செய்ய முடியும்? சீனாவின் வுகான் மாநிலத்தில் பிறந்த ஒரு நச்சுக்கிருமியை உலகம் தத்தெடுத்து பங்கிட்டு அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாது தவித்துக் …

கொரோனாவை பரப்பியதற்காக சீனா மீது வழக்குப் பதிவு- பின்னணி என்ன?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸை பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டொலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க மாவட்டத்தின் மேற்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் டெக்சாஸைச் சேர்ந்த வழக்கறிஞர் லாரி க்ளேமேன் வழக்குப் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது. உலகப்போருக்கான ஆயுதமாக அதை உருவாக்கி, வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சீனா, அமெரிக்க …

இலங்கையில் ஐ.டி.எச் மருத்துவரை தாக்கிய கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் நோயாளர்கள் அதிகளவில் சிகிச்சைப் பெற்றுவரும் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்சமயம் குறித்த மருத்துவர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த மருத்துவர் மருத்துவமனையின் பொது தொடர்பாடல் பிரிவில் பணியாற்றியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.