கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.

கொரொனோ வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் வேளையில் உத்தியோகபூர்வ தகவல்களின்படி,

கொரோனா வைரஸின் பிடியினால் இத்தாலி அதன் மிக உயர்ந்த ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையை உலகத்திற்கு பேரதிர்ச்சி ஏற்ப்படுத்தியுள்ளது.

வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 250 பேர் பலியாகி உள்ளனர். 2,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 250 இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த இறப்பு 1,266 ஆக உள்ளது, மொத்தம் 17,660 நோய்த்தொற்றுகள் ஏற்ப்பட்டுள்ளதாக சுகாதார தொண்டு நிறுவனம்தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே அறிவித்துள்ளார்.

இதன் மூலம் இத்தாலியில் வசிக்கும் மக்கள் உடல்நலம், அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *