கொரோனா வைரஸினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இடையே ஒன்றரை மாதக் குழந்தையும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் இருந்து வந்த இலங்கை குடும்பத்தினரில் மனைவிக்கு ஏற்பட்ட தொற்று குழந்தைக்கும் பரவியுள்ளதாகவும் கூறபடுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா என பரிசோதனை நடத்தப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும் 16 மத்திய நிலையங்களில் இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்த 2258 பேர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *