நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை இன்று மட்டும் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே 11 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த ஏழு பேரும் ஆண்கள் என்பதுடன், அவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்து கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *