நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

எதிர்காலத்தில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வவுனியா – கந்தகாடு தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்து பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 42 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இத்தாலியில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 56 வயதான ​பெண் ஒருவருக்கும் அவரின் உறவினரான 17 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் 17 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *