கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று (மார்ச் 21) சனிக்கிழமை அநுராதபுரம் வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 77பேர்) அதிகரித்துள்ளது.
நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 235 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.
அத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 22 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 800 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.
Leave a Reply