இந்திய சினிமாவில் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கி பெயர் போனது பாலிவுட் சினிமா தான். ஆனால் கடந்த சில நாட்களாக அவர்களையே மிஞ்சும் அளவிற்கு தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் பிரம்மாண்டத்தில் பிரமாண்டமாய் படமியக்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது பாகுபலி படத்திற்கு இன்னொரு வரலாற்று சிறப்பிமிக்க திரைப்படம் உருவாகி வருகிறது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

வருகிற மார்ச் 26 ஆம் தேதி மலையாளம், தமிழ் , தெலுங்கு , இந்தி , கன்னடம் என மொத்தம் 5 மொழிகளில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. பிரம்மாண்டத்தில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் பாகுபலிக்கு ஈடுகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே

நம் மக்களைப் பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பாக
மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் இருக்கும் என பெருமையாக கூறலாம்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *