வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இரு சிறுவர்கள் உட்பட நால்வரை பொலிசார் அழைத்துச்சென்றுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு சென்ற வவுனியா பொலிஸ் நிலைய விசேட கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் லக்மால் அவர்களின் தலைமையிலான வவுனியா பொலிஸ் நிலைய விசேட கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவினர் குறித்த வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு இன்று காலை சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது ஒர் குடும்பத்தினை சேர்ந்த மனைவி (வயது- 35) , பிள்ளைகள் (5-8வயது) ஆகியோர் கடந்த மாதம் (2) இறுதியில் பெல்ஜியம் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் எவையும் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கணவர் நேற்று (15.03) இரவு பெல்ஜியம் நாட்டிலிருந்து (பரிசோதனைகள் மேற்கொண்டு) வருகை தந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் வவுனியா மாவட்டத்தில் அச்ச நிலை காணப்படுவதினால் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கணவன், மனைவி , இரு பிள்ளைகளை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தும் முகமாக அவர்களை பொலிஸார் வைத்தியசாலைக்கு உடனடியாக அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *