கியூபாவில் பெரும் இயற்கைப் பேரிடர் வந்து மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்!
“உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்” என பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்.
அப்போது அமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் அவர்களுக்கு உதவி செய்யவில்லை. அதன்பின்னர் கியூபாவில் ஏற்பட்ட பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். கியூபாவில் மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப் பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன.
அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், அய்ரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் பிடல் உருவாக்கினார்.
அதன்பின்னர் உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது கியூபா. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள். இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்.
அதாவது உலக நாடுகளே!உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம் எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள் , என பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
அந்த வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 இலட்சம் மருத்துவர்களைக் கியூபா அனுப்பியுள்ளது. இன்றைக்கு ‘கொரோனா’ வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ, அப்படி 60 ஆண்டுகளாக இந்தக் கியூபாவை அமெரிக்கா தனிமைப் படுத்தி வைத்தி இருக்கிறது.
அவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா. இதோ இப்பொழுது பிரிட்டன் போன்ற நாடுகள் எவ்வளவோ கெடுதல் செய்தாலும், அந்த மக்களையும் காப்பாற்ற கியூபா தான் முன் வந்துள்ளமையும் இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.
Leave a Reply